அய்யா துணை...
- திருநெல்வேலி மாவட்டடம், அம்பாசமுத்திரம் (தற்போது அம்பை) தாலுகாவில் அமைந்துள்ளது மேலஏர்மாள்புரம் கிராமம். இந்த கிராமம் மணிமுத்தாறு நீர்த்தேக்க அணைக்கு 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. தென்திசையில் மணிமுத்தாறு அணையின் ஆறும், வடக்குதிசையில் பாபநாசம் அணையின் தாமிபரணி ஆற்றையும் பெறும் நீர் ஆதாரமாக கொண்டு சுற்றிலும் ஆறு, குளம், ஓடை, வயல், தோட்டம் என செழிப்புமிகு சமத்துவ கிராமம். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு சில முன்னோர்கள் சாமித்தோப்பில் உள்ள தலைமை பதி அய்யா வைகுண்டர் அருளுடன் அங்கிருந்து பிடிமண் எடுத்து இந்த கிராமத்தில் திருத்தாங்கல் அமைத்தனர். அன்று முதல் அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி ஆசி வழங்கி வருகிறார். இன்று அரசன் பதி என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அய்யா உண்டு.